உழவன் செயலி பயன்பாடு மாணவியர் விளக்கம்
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், வியாசபுரம் அடுத்த புண்டரீகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஜெயா வேளாண் கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவியர் திருவாலங்காடு பகுதியில் கிராமப்புற விவசாயப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையிலான உழவன் செயலியின் பயன்பாடு குறித்து திருவாலங்காடு கிராம விவசாயிகளிடம் விளக்கினர். அதன்படி பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள்.விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களையும் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளையும் உழவன் செயலி வாயிலாக தெரிந்து கொள்ள முடியும் என விவசாயிகளிடம் விளக்கினர்.இதில் அப்பகுதியை சேர்ந்த 30 விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.