உள்ளூர் செய்திகள்

பள்ளி கல்வித்துறை சாதனைகள் வெளியீடு

சென்னை: தி.மு.க., ஆட்சியில் பள்ளிக்கல்வி துறையில், பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதால், அரசு தொடக்க பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துஉள்ளது.அரசு தொடக்க பள்ளிகளில், 600 கோடி ரூபாயில் காலை உணவு திட்டம்; 436 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள்; 590 கோடியில் இல்லம் தேடி கல்வித்திட்டம்; 101 கோடியில் ஆசிரியர்களுக்கு டேப், 1,887 கோடி ரூபாயில், அனைத்து வகை பள்ளிகளிலும், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.இப்படி பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக, அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.எனவே தான் கல்வித்துறை முன்னேற்றத்தில், தமிழகம் இந்தியாவில் சிறந்து விளங்குகிறது என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்