உள்ளூர் செய்திகள்

உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லுாரி கனவு நிகழ்ச்சி

கரூர்: கரூர் அரசு கலை கல்லுாரியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உயர்கல்விக்கு வழிகாட்டும் என் கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடந்தது.இதில், கலெக்டர் தங்கவேல் தலைமைவகித்து பேசியதாவது:பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில், அவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பாடவாரியான பட்டப்படிப்புகள். பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், தலைச்சிறந்த வல்லுநர்கள், கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.எதிர்காலத்தில் எந்தெந்த துறைகளில், வாய்ப்புகள் அதிகமாக உள்ளன, முன்னேறிவரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவ, மாணவிகள் தங்கள் திறன்களை எவ்வாறு மென்மேலும் வளர்த்துக் கொள்ளலாம் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அலுவலர் சண்முக வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்