நீட் முறைகேடு சி.பி.ஐ., விசாரிக்குமா?
பெங்களூரு: நீட் தேர்வு முறைகேடு பற்றி சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று மருத்துவ கல்வி அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் வலியுறுத்தி உள்ளார்.மருத்துவ கல்வி அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது மிகப் பெரிய ஊழல். இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் பேர் கவலையில் உள்ளனர். மாணவர்கள் எதிர்காலத்துடன் மத்திய அரசு விளையாடுகிறது. நீட் தேர்வு முறைகேட்டில், மத்திய அரசு இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. யாரை பாதுகாக்க பார்க்கின்றனர்.மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விட்டால் நாடு முழுதும் போராட்டங்கள் நடக்கும். நீட் தேர்வை நடத்தக்கூடாது என்று சில மாநில அரசுகள் கோரிக்கை வைத்து உள்ளன. இந்த தேர்வில் அநீதி நடப்பதால், உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.