உள்ளூர் செய்திகள்

ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஊதியத்தை உயர்த்த வேண்டும்

மதுரை: மதுரையை சேர்ந்த, ஆசிரியரல்லாத பணியாளரான கிருஷ்ணன் என்பவர், ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், சம வேலைக்கு சம ஊதியம் நிர்ணயித்து வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை, 2022ல் விசாரித்த தனிநீதிபதி, வழக்கை முடித்து வைத்தார். இதை எதிர்த்து, கிருஷ்ணன் மேல்முறையீடு செய்தார்.அந்த மனுவை நேற்று விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: தொகுப்பூதிய அரசாணைப்படி மனுதாரருக்கு மாதம் 6000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இது, ஆசிரியரல்லாதவர்களுக்கு போதுமானதல்ல. இது, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழும் வராது.இவ்வளவு குறைந்த சம்பளத்தை வைத்து வாழ்க்கையை நடத்துவதும் சிரமம். சம்பளத்தை உயர்த்துவது தான் தீர்வாக அமையும். ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. அதுபோல, ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு சம்பளத்தை மாற்றியமைத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை, நான்கு வாரங்களில் அரசாணை வெளியிட வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்