உள்ளூர் செய்திகள்

தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கற்பித்தல் திறன் அவசியம்

மதுரை: மதுரை லேடி டோக் கல்லுாரியில் உள்ளடக்கங்களை உருவாக்குவதில் தற்காலப் போக்குகள்' என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தலைமையில் நடந்தது.பேராசிரியைகள் ஷீபா சுகந்தராணி துவக்கி வைத்தார். சிவப்பிரியா வரவேற்றார். கேரள மத்திய பல்கலை கல்வியியல் புல பேராசிரியர் தியாகு பேசுகையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப கற்றல், கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பத்தை ஆசிரியர்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். நேரடி, இணைய வகுப்பறைகளில் மாணவர்களை ஈர்க்கும் வகையில் உள்ளடக்கங்கள் உருவாக்க வேண்டும் என்றார். துணை முதல்வர் நிம்மா எலிசபெத் உட்பட 40க்கும் மேற்பட்ட பேராசிரியைகள் பங்கேற்றனர். ஊடக மைய ஒருங்கிணைப்பாளர் காஜல் ஜே மேத்தா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்