உள்ளூர் செய்திகள்

அறிவியல் இயக்க பயிற்சி பட்டறை

திண்டுக்கல்: திண்டுக்கல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநாடு,மாநில கருத்தாளர்கள் பயிற்சி பட்டறை நடந்தது. நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற கருப்பொருளில் இப்பயிற்சியில் கருத்தாளர்களாக டாக்டர்கள் தினகரன், கோபிநாத்,பேராசிரியர் மோகனா,சாலவுதீன், அருண்விவேக் பங்கேற்று பயிற்சி கொடுத்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன்,அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முகமதுபாதுஷா பேசினர். திண்டுக்கல் மாவட்ட தலைவர் வளர்மதி வரவேற்றார். மாநில அமைப்பின் சார்பில் விருதுகள் பெற்ற வளர்மதி,சாந்தா குமாரி ஆகியோரை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ராசு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்