உள்ளூர் செய்திகள்

உயிரி உற்பத்தி படிப்பு ஐ.ஐ.டி.,யில் அறிமுகம்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யும், பிரான்ஸ் பல்கலையும் இணைந்து, உயிரி உற்பத்தி படிப்பை அறிமுகம் செய்துள்ளன.மத்திய அரசின், பயோ இ3 கொள்கையின்படி, பிரான்ஸ் நாட்டின் டூர்ஸ் பல்கலையுடன் இணைந்து, உயிரி உற்பத்தி படிப்பை சென்னை ஐ.ஐ.டி., அறிமுகம் செய்துள்ளது.இதன் வாயிலாக, தாவரம் மற்றும் நுண்ணுயிரிகளுக்கான உயிரி தொழிற்சாலைகளில் இருந்து, நிலையான உயிரி உற்பத்தி செய்யும் பயற்சி வழங்கப்படும். ஆய்வாளர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் தாவர உயிரி தொழில்நுட்பம், பயோ பிராசஸ் இன்ஜினியரிங், உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றில், பி.டெக்., எம்.டெக்., பி.எச்டி., படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.மொத்தம், 30 இடங்களே உள்ளன. இதற்கு, https://shorturl.at/23b9H என்ற இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 22 வரை விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்