உள்ளூர் செய்திகள்

நாளை ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) தேர்வு நாளை நடக்கிறது. இதை சிறப்பாக நடத்துவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நடந்தது.இதில், மாவட்ட கலெக்டர் சரயு பேசியதாவது: கிருஷ்ணகிரி தாலுகாவில், கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என, 2 தேர்வுக்கூடங்களில், 852 தேர்வர்கள், தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் தேர்வு கூடங்களுக்கு சரியான நேரத்திற்குள் வர வேண்டும். தாமதமாக வருபவர்கள், தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்