உள்ளூர் செய்திகள்

போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த எம்.பி.,

வாடிப்பட்டி: பரவை சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் ஜாதிச் சான்றிதழ் கேட்டு வரும் மாணவர்கள் பெற்றோர்களுடன் 4வது நாளாக தொடர் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று விடுமுறை நாளிலும் சீருடை அணிந்து போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை நேரில் சந்தித்த மதுரை எம்.பி., வெங்கடேசன் ஆதரவு தெரிவித்தார்.அவர் பேசியதாவது:இந்த சமுதாயத்தை சேர்ந்த மூத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, தற்போது படிக்கும் இளைய சமுதாயத்தினருக்கு வழங்க மறுப்பதில் நியாயம் இல்லை. சமவெளி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஜாதி சான்று வழங்க வேண்டும்.இல்லையேல் இவர்களது கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண்போம் எனப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்