தலைமையாசிரியர்கள் சங்க ஐம்பெரும் விழா
திண்டுக்கல்: தமிழ்நாடு உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி தலைமையாரியர்கள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.திண்டுக்கல் நேருஜி மேல்நிலைப்பள்ளியில் நடந்த இதற்கு மாவட்ட தலைவர் வேளாங்கன்னி, செயலர் ராஜா தலைமை வகித்தனர்.மகளிரணிச் செயலர் தெய்வானை, மாவட்ட துணைத் தலைவர் ராஜாமாரீஸ், கல்வி மாவட்ட தலைவர் சண்முகநாதன், பொருளாளர்கள் அமுதா, அருட்செல்வன் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலர் அன்பரன் வரவேற்றார்.மாநில தலைவர் அன்பரசன், பொதுச்செயலர் மாரிமுத்து பேசினர். பதவி உயர்வு பெற்ற, நல்லாசிரியர் , ஆசிரியர் செம்மல் விருது பெற்ற, பணிமாறுதல் பெற்ற தலைமையாசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.பொதுச்தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் , அலுவலர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அவர்கள் முதுகலை ஆசிரியர்களாக பணிபுரிந்த பணிக்காலத்தையும் சேர்த்து தேர்வு நிலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கல்வி மாவட்ட தலைவர் வெங்டேசன் நன்றி கூறினார். மாவட்ட பொருளாளர் சோமசுந்தரம் தொகுப்புரையாற்றினார்.