மொபைல்போன் பயன்பாடு; மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, அரசு உயர்நிலைப்பள்ளியில் மொபைல்போன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி அருகே, ஆர்.கோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், பொள்ளாச்சி ரவுண்ட் டேபிள், பொள்ளாச்சி லேடீஸ் சர்க்கிள் அமைப்பு சார்பில், பல் பாதுகாப்பு, மொபைல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பல் டாக்டர் பரீத், பல் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விளக்கம் அளித்தார். பற்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்; பல் பராமரிப்பு முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.தொடர்ந்து, மாணவர்களிடம், மொபைல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. அதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி ரவுண்ட் டேபிள் தலைவர் யுவராஜ், பொள்ளாச்சி லேடீஸ் சர்க்கிள் அமைப்பு தலைவர் பார்கவி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.