தனித்திறன்களை வளர்க்க மாணவர்களுக்கு அறிவுரை
கோவை: நவ இந்தியா, இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 26வது ஆண்டு விழா நடந்தது.மாணவர்கள் தங்களின் தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில், இசை, பாடல், நடனம் என பல்வேறு கலை நிகழ்வுகள் நடந்தன. பத்து மற்றும், பிளஸ் பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தேசிய அளவில் நீச்சல் போட்டியில், சாதனை படைத்த எட்டாம் வகுப்பு மாணவர் கபிலன் கவுரவிக்கப்பட்டார். இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி, செயலர் பிரியா, முதல்வர் செண்பகவல்லி, ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.