உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு

சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த தொட்டியம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலெக்டர் பிரசாந்த் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, மாணவர்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், பாடும் திறமைகள் மற்றும் தனித்திறன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும் மாணவர்களின் கணித அறிவு குறித்து கேள்விகள் எழுப்பி ஊக்கப்படுத் தினார். பள்ளியில் மாணவர்களின் வருகை பதிவேடு, கற்றல் திறன் மற்றும் பாடத்திட்ட குறிப்பேடுகள குறித்தும் சோதனை மேற்கொண்டார்.ஆய்வின்போது தலைமை ஆசிரியர் கீதா மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்