கல்லுாரி மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர்
மேலுார் : கிடாரிப்பட்டி லதா மாதவன் பாலி டெக்னிக் கல்லுாரியில் பள்ளி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்களுடன் அமைச்சர்கள் மூர்த்தி, மகேஷ் கலந்துரையாடினர்.இங்கு விண்ணில் விஞ்ஞான தேடல் என்ற தலைப்பில் உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடந்தது. ஐந்து நாட்கள் நடந்த முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுடன் அமைச்சர்கள் மூர்த்தி, மகேஷ் கலந்துரையாடினர்.ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 பேர் வீதம் 28 தகை சால் பள்ளிளின் 140 மாணவர்கள் முகாமல் பங்கேற்றனர். மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், ரோபோடிக்ஸ், இணையவழி பாதுகாப்பு, தலைமைப் பண்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.களப்பயணமாக கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நுாற்றாண்டு நூலகம், திருமலை நாயக்கர் மகால் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். குழந்தைகளை கல்வி அறிவு மட்டுமின்றி பகுத்தறிவுடனும் வளர்க்க வேண்டும் என்பதற்காக இம் முகாம் நடத்துவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.கலெக்டர் சங்கீதா, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் குமார், சி.இ.ஓ., ரேனுகா, உதவி திட்ட அலுவலர் (மாவட்ட கல்வி) சரவண முருகன், கல்லுாரி செயல் அலுவலர்கள் முத்துமணி, பிரபாகரன், காந்திநாதன், மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டனர்.