உள்ளூர் செய்திகள்

மங்களூரில் இன்று புத்தகப் பிரியர் தினம்

மங்களூரு: மங்களூரு குட்முல் ரங்கா ராவ் டவுன் ஹாலில் இன்று புத்தகப் பிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.ரங்கா சமாகா அறக்கட்டளை தலைவர் மைம் ராம்தாஸ் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளாக மங்களூரில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். நடப்பாண்டு புத்தக பிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இளம் தலைமுறையினரை புத்தகம் வாசிக்க வைப்பதே எங்களுடைய நோக்கமாக உள்ளது. மேலும் வாசிப்பு பழக்கத்தைஅதிகப்படுத்துவதே எங்கள் நோக்கம்.புத்தக வெளியீடு, புத்தகவிற்பனை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சி மங்களூரு குட்முல் ரங்கா ராவ் டவுன் ஹாலில், இன்று காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. கன்னடம், ஆங்கில புத்தகங்கள் விற்கப்படுகிறது.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்