சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு அவகாசம் நீட்டிப்பு
புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் நுழைவுத் தேர்வுக்கு கடந்த, 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அது, 18 வரை நீட்டிக்கப்பட்டது.இப்போது, 20ம் தேதி வரை மாலை 6:00 மணி வரை, நுழைவு தேர்வுக்கான விண்ணப்பங்களை அனுப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், விண்ணப்பங்களை சரிபார்த்து கொள்வதற்காக, வரும், 22 முதல், 28ம் தேதி வரை யு.பி.எஸ்.சி., அவகாசம் வழங்கியுள்ளது.