சட்ட பேராசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., தமிழக சட்டக் கல்லுாரிகளில் காலியாக உள்ள பல்வேறு பாடப்பிரிவுகளில், 64 உதவி பேராசிரியர், எட்டு இணை பேராசிரியர், 60 சட்ட முன்படிப்புக்கான உதவி பேராசிரியர் என, மொத்தம், 132 பணியிடங்களை நிரப்ப உள்ளது.கட்டாய தமிழ் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும். எழுத்து தேர்வு, மே 11ம் தேதி நடைபெற உள்ளது.