உள்ளூர் செய்திகள்

போலி கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி., எச்சரிக்கை

சென்னை: பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின் செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு:யு.ஜி.சி., சட்டப்படி, யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்பும், சான்றிதழும் மட்டுமே, உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் தகுதியானவை.ஆனால், நாட்டில் அங்கீகாரம் பெறாத போலியான கல்வி நிறுவனங்கள், கவர்ச்சியாக விளம்பரம் செய்து மாணவர்களை சேர்த்து, பட்டங்களை வழங்குகின்றன. இதனால், மாணவர்களின் முன்னேற்றமும், பெற்றோரின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.அதனால், போலியான நிறுவனங்கள், யு.ஜி.சி.,யால் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் பட்டியல், www.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.பட்டப்படிப்புகளில் சேரும் முன், மாணவர்களும், பெற்றோரும் அவற்றை அறிந்து, பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். போலி கல்வி நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிந்தால், ugcampc@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்