உள்ளூர் செய்திகள்

கல்வெட்டியல் சான்றிதழ் படிப்பு அறிமுகம்

சென்னை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, தொல்லியல் துறை சார்பில், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் சார்ந்த சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதற்கான வகுப்புகளை, சனி, ஞாயிறன்று மட்டும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கல்வெட்டுகளை படியெடுப்பது, பராமரிப்பது, கல்வெட்டுகளில் உள்ள பழந்தமிழ் எழுத்துகளை அறிவது, அவற்றின் தொல்லியல் முக்கியத்துவம், பண்டைய தமிழர்களின் கலை, கலாசாரம் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெறும்.இதில், சேர ஆர்வமுள்ள பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்த மாதம் 28ம் தேதிக்குள், https://www.msuniv.ac.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்