சென்னை ஐ.ஐ.டி.,யில் இலவச ஏ.ஐ., படிப்புகள்
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யின், ஸ்வயம் பிளஸ் கல்வித் திட்டத்தின் வாயிலாக, செயற்கை நுண்ணறிவு சார்ந்த, ஆன்லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.சென்னை ஐ.ஐ.டி.,யின், ஸ்வயம் பிளஸ் கல்வி திட்டத்தின் கீழ், இயற்பியல், வேதியியல், கணக்குப்பதிவியல், கிரிக்கெட் அனலிட்டிக்ஸ், எம்.எல்., யூசிங் பைத்தான் போன்ற பாடங்களில், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்த பாடங்கள், இலவசமாக நடத்தப்பட உள்ளன.இன்ஜினியரிங், கலை - அறிவியல் சார்ந்த படிப்புகளை முடித்த மாணவர்கள், ஆசிரியர்கள், பணியில் உள்ளோர், இந்த படிப்பில் சேரலாம். 25 முதல் 45 மணி நேரங்கள் கொண்ட இந்த வகுப்பில் சேர, வரும் 12ம் தேதிக்குள், https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதள இணைப்பில் பதிவு செய்ய வேண்டும்.