இந்திய வனப்பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்திய வனப்பணியாளர் தேர்வு 2024 முடிவுகள் இன்று யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.யுபிஎஸ்சி ஆல் நடத்தப்பட்ட ஐஎப்எஸ் தேர்வுக்கான நேர்முகத் தேர்வு 2025 ஏப்ரல் 21 முதல் மே 2 வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 143 தேர்வர்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில், 78 பேர் ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியின் (சென்னை, டெல்லி, பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம்) மாணவர்கள் ஆவார்கள். இந்தியா முழுவதிலும் முதல் 10 ரேங்க்களில் 6 பேர் ஷங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்களாக இருக்கின்றனர்.இந்தத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் வெற்றிபெற்றுள்ளனர். அவர்களில், நிலாபாரதி எம்.வி. அகில இந்திய தரவரிசை 24 பெற்றவர், தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழகத்தில் வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களும் ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியின் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றுள்ளனர். இந்த 10 பேரில் 4 பேர் பெண்கள் ஆவார்கள். தமிழக முதல் ரேங்க் பெற்ற நிலாபாரதி நேரடி வகுப்பு திட்டத்தில் பயின்றவர். மேலும்,பொதுத் தேர்வுகளுக்கும் , விருப்பத் தேர்வுக்கும் மற்றும் நேர்முகத் தேர்வுக்கும் ஷங்கர் ஐஏஎஸ் அகாடமி தேர்வு தொடரில் பங்கேற்றவர்.அகில இந்திய ரேங்கில்:ஏர் 1: கனிகா அனப்ஏர் 2: காந்தேல்வால் ஆனந்த் அனில்குமார்ஏர் 3: அனுபவ் சிங்ஏர் 6: சன்ஸ்கார் விஜய்ஏர் 7: மயங்க் புரோகித்ஏர் 8: சனிஷ் குமார் சிங்இவர்கள் அனைவரும் எங்கள் நேர்முகத் தேர்வு பயிற்சியில் பங்கேற்றவர்கள்.