உள்ளூர் செய்திகள்

பழங்குடியினச் சிறுமிகளுக்கான கல்வித் திட்டம்

சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடி சிறுமிகளுக்காக, தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகம் 100 சதவித நிதியுதவியுடன் கூடிய கல்வித் திட்டங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. சமூக பொறுப்புடைமையின் ஒரு பகுதியாக, பஸ்தார், தண்டேவாடா, சுக்மா, கொண்டகான், பிஜாப்பூர் மற்றும் நாராயண்பூர் பகுதிகளைச் சேர்ந்த இளம் பழங்குடியினப் பெண்கள், அப்பல்லோ, யசோதா மற்றும் கேஐஎம்எஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் பயிற்சிகளை இலவசமாக பெறலாம்.மொத்தம் 200 இடங்கள் உள்ள இந்தத் திட்டத்தில், படிப்புக்கான கல்விச் செலவுகள், விடுதிக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்தும் எம்.எம்.டி.சி மூலம் வழங்கப்படும். ஒரு மாணவிக்கு ரூ.12-ரூ15 லட்சம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000க்கு மேல் இருக்கக் கூடாது. விண்ணப்பிக்கக் கடைசி தேதி ஜூன் 28ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த திட்டம், பழங்குடி இளைஞர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான முக்கியமான படியாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்