கோவை புத்தக திருவிழா இன்று துவங்குகிறது
கோவை: கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் கொடிசியா சார்பில் கோவை புத்தகத் திருவிழா 2025 இன்று துவங்குகிறது.வரும் 27ம் தேதி வரை நடக்கும் புத்தக கண்காட்சியில், 320 ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. 10க்கும் மேற்பட்ட வெளிமாநிலங்களில் இருந்து நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பல்வேறு மொழிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெறுகின்றன.மாலை 6:00 மணிக்கு நடக்கும் துவக்க விழாவில், எம்.பி., கணபதி ராஜ்குமார், கலெக்டர், பொதுநூலக இயக்குநர் ஜெயந்தி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், புத்தக திருவிழா தலைவர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். துவக்கவிழாவில், சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.