உள்ளூர் செய்திகள்

கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்

சென்னை: கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி மாணவர் சேர்க்கைக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கியதை தொடர்ந்து, மாணவர் சேர்க்கை நடைமுறை, வரும் 6ம் தேதி துவங்கும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், மாணவர் சேர்க்கைக்காக, அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் அபத்தமாக உள்ளன.அதன்படி, இதுவரை பள்ளிகளில் சேராத எந்த மாணவரும், புதிதாக விண்ணப்பித்து, தனியார் பள்ளிகளில் சேர முடியாது. மாறாக, ஏற்கனவே சேர்ந்த மாணவர்களில், கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி தகுதி பெற்றவர்கள் இருந்தால், அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்படுமாம். அதிலும், சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்த அநீதியான விதிகளால், மாணவர் சேர்க்கை துவங்கியும் பயனில்லை.எனவே, இதுவரை எந்தப் பள்ளிகளிலும் சேராத, கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி பயனடைய தகுதியுள்ள குழந்தைகளை , அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர அனுமதிக்க வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்