உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலையில் பாஸ்போர்ட் சேவா முகாம்

கோவை: குறிப்பிட்ட கால இடைவெளியில், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், பாஸ்போர்ட் தொடர்பான தேவைகளை நிறைவேற்றவும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.சில வாரங்களுக்கு முன், ஆனைகட்டி, தாளவாடி, நெகமம், காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன் ஒரு கட்டமாக, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், மொபைல் பாஸ்போர்ட் சேவா வேன் முகாம் இன்று துவங்குகிறது.பாஸ்போர்ட் சேவா கேந்திர இயக்குனர் கோவேந்தன், பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு) தமிழ்வேந்தன் துவக்கி வைக்கின்றனர். பல்கலை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பணிபுரியும் ஊழியர்கள் பயன்பெற இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் வீதம், இரு வாரங்கள் நடத்தப்பட உள்ளது, என, பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்