வேளாண் தொழில் இலவச பயிற்சி
மதுரை: மதுரையில் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) சார்பில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை மானியத்துடன் வங்கிக்கடன் பெற இலவச பயிற்சி நடக்கிறது. தங்கும் இடம், உணவு இலவசம். வயது வரம்பு 21 முதல் 60 வரை.கல்வித்தகுதி பி.எஸ்.சி., தாவரவியல், விலங்கியல், வேதியியல், வேளாண்கலை, தோட்டகலை, சுற்றுச்சூழல் அறிவியல், உணவு தொழில்நுட்பம், மீன்வளம், வேளாண் உயிரி தொழில்நுட்பம் , பிஇ, பி.டெக் உள்ளிட்ட விவசாயம் முடித்து ஓராண்டான இருபாலரும் பங்கேற்கலாம். விபரங்களுக்கு: 0452-2602339