உள்ளூர் செய்திகள்

சாரண, சாரணியர் இயக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த, 19 முதல், 25ம் தேதி வரை, 7 நாட்கள் நடந்தன.இதில், 45க்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மொத்தம், 75க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். பல்வேறு குழுக்களாக ஆசிரியர்கள் பிரிக்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்பட்டன.மாணவ, மாணவியருக்கு, உணவு பழக்கம், ஒழுக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எடுத்து கூறும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.அங்கேயே ஒரு வாரம் தங்கியிருந்து, ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர். நிறைவு நாளான நேற்று, பயிற்சியில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்