உள்ளூர் செய்திகள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு

கோவை, பள்ளி கல்வி துறை சார்பில் அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை - 1, கம்ப்யூட்டர் பயிற்றுனர் நிலை - 1 ஆகிய பதவிகளில் உள்ள 1,996 காலி இடங்களுக்கு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.ஆசிரியர்களுக்கு பள்ளிகளை தேர்வு செய்து பணி நியமனம் செய்யும் கலந்தாய்வு ரேங்க் அடிப்படையில் ஆன்லைனில் நடந்தது. கோவை மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி தலைமையில் ஏற்பாடு செய்த கலந்தாய்வில் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.அடுத்து தமிழகம் முழுக்க காலி இடங்களை நிரப்பும் வகையில் கலந்தாய்வு நடந்தது. அனைத்து பாடப்பிரிவுகளையும் சேர்ந்த, 73 பேர் தங்களுக்கான பணியிடங்களை தேர்வு செய்தனர்.கூறுகையில், “கலந்தாய்வும் சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்தது. 13ம் தேதி பணி நியமன உத்தரவுகளை முதல்வர் வழங்குவார். அடுத்த நாளே ஆசிரியர்கள் வேலையில் சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் 57 காலி இடங்கள் உள்ளன” என்று முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்