இலவச தையல், டேலி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி: தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் அலைபேசி பழுது நீக்குதல், டேலி பயிற்சி, கண்காணிப்பு கேமரா பொறுத்துதல், சரிபார்த்தல் பயிற்சி, பெண்களுக்கு தையல் ஆகிய இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்., 1 முதல் துவங்குகிறது. பயிற்சிகள் 13 நாட்கள் முதல் 38 நாட்கள் வரை வழங்கப்படுகிறது. பயிற்சி காலை 09:30 மணி முதல் மாலை 05:30 மணி வரை வழங்கப்படும். பயிற்சியின் போது உணவு, தங்கும் இடம் இலவசம். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ், தொழில் துவங்கி வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு கருவேல்நாயக்கன் பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். அல்லது 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்தார்.