உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

விருத்தாசலம்: விருத்தாசலம் கே.எஸ்.ஆர்., ஹைடெக் பள்ளியில் கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.பள்ளியின் செயலர் அனிதா சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். தாளாளர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை டாக்டர்கள் பாலமுருகன், புவனேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கே.ஜி., மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினர்.மேலும், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.பள்ளி முதல்வர் பெட்ரீசியா செபஸ்டியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்