அரசு கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
குளித்தலை: குளித்தலை, டாக்டர் கலைஞர் அரசு கலை கல்லுாரியில், 15வது பட்டமளிப்பு விழா நடந்தது.முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். திருச்சி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் பட்டம் வழங்கி பேசியதாவது:இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில், உயர் கல்வியில் மிகவும் பின்தங்கியே இருந்தது. தற்போது வளர்ந்து வரும் தேவைகள் காரணமாக, உயர்கல்வியில் மிக உயரிய நிலையை தமிழ்நாடு அடைந்து வருகிறது. பட்டம் பெறும் மாணவ, மாணவியர் சமுதாய பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.மாணவர்களின் ஒவ்வொரு செயலும் நேர்மை உடையதாவும் பொறுப்பு உடையதாகவும் இருக்க வேண்டும். கடின உழைப்பால் உயர் பதவிகளை அடைவதே இலக்காக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார். உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல் துறை தலைவர் மகேந்திரன், கணிதத்துறை தலைவர் உமாதேவி, மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு உள்பட பல்வேறு துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.