உள்ளூர் செய்திகள்

பண்ணாரி அம்மன் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை: பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், இங்கிலாந்தை சேர்ந்த சமீரா குளோபல் டெக்னாலஜி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில், சமீரா குளோபல் டெக்னாலஜி நிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குனர் பங்கஜ் பட்டு, மூத்த மேலாளர் தீபக் மற்றும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பழனிசாமி, டீன் (நிர்வாகம்) சிவகுமார் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.இதன் வாயிலாக, மாணவர்களுக்கு உலகளாவிய தொழில் தரநிலைகளுக்கு ஏற்ப இன்டர்ன்ஷிப் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மாணவர்கள் மேற்கு நாடுகளில் உள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற உதவுவதோடு, அவர்களின் சர்வதேச தொழில் வாய்ப்புகளையும் விரிவுபடுத்த ஒப்பந்தம் உதவும் என்று முதல்வர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்