அல்கெமி பப்ளிக் பள்ளி ஆண்டு விழா
கோவை: சரவணம்பட்டி, பி.பி.ஜி., கல்விக் குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்படும் அல்கெமி பப்ளிக் பள்ளியில், ஆண்டு விழா நடந்தது. விழாவில் குமரகுரு நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.பத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். 'இயற்கையின் சாராம்சம்' என்ற கருப்பொருளைக் கொண்ட தலைப்பில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சிகள் இந்தியாவின் பண்பாட்டு மரபையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தின. ஆடல், பாடல், நாடகம் என வண்ணமிகு கலைநிகழ்வுகள் கவர்ந்தன.விழாவில் பி.பி.ஜி., கல்விக் குழும தலைவர் தங்கவேலு, தாளாளர் சாந்தி, துணைத் தலைவர் அக்ஷய், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.