பிரசிடென்சி பள்ளிக்கு கல்வி சேவை விருது
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி எலைட் பள்ளி சிறந்த கல்வி மற்றும் கல்வி சேவைக்கான விருதினை பெற்று சாதனை படைத்துள்ளது.ரெட்டியார்பாளையத்தில் உள்ள பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி எலைட்டிற்கு சிறந்த கல்வி மற்றும் கல்விச் சேவைக்கான விருதினை சென்னை கல்சன் குழுமம் வழங்கி கவுரப்படுத்தியுள்ளது. இதற்காக கம்பன் கலையரங்கில் நடந்த விழாவிற்கு, புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி ஆனந்த், கல்சன் குழுமத்தின் தலைவர் பிரவீண், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் விருதினை வழங்க, அதனை பிரசிடென்சி எலைட் பள்ளியின் செயலாளர் கவுதம், துணை முதல்வர் ஜோசப் ஜான்பால், ஒருங்கிணைப்பாளர்கள் நந்தகோபால், மாரிமுத்து ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.விருது பெற்றவர்கள் பிரசிடென்சி கல்விக் குழுமத்தின் தலைவர் கிறிஸ்துராஜ் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.