உள்ளூர் செய்திகள்

வளர் கலைக்கூடத்தில் ஓவிய கண்காட்சி

புதுச்சேரி: புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்பில் ஓவியக் கண்காட்சி நடந்து வருகிறது.புதுச்சேரி செயின்ட் லூயி வீதி, வளர்கலைக்கூடத்தில் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்பில் ஓவியர் ஜெயராமன் வரைந்த தனிநபர் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி துவங்கி நடந்து வருகிறது.ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளை நெறிப்படுத்தும் வகையில் ஓவியர் ஜெயராமன் வண்ணமயமான ஓவியங்களையும், நுணுக்கமான சிற்பங்களையும் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளார். கடந்த 1ம் தேதி துவங்கிய கண்காட்சி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது.புதுச்சேரியைச் சேர்ந்த கலை ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்கள் இக்கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்