பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
தேனி: மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான புத்தகங்கள்அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள் 530, உதவி பெறும் பள்ளிகள் 216 உள்ளன. இப்பள்ளிகளுக்கு தேவையான பாடபுத்தகங்கள், நோட்டுகள் கடந்த மாத இறுதியில் தேனியில் உள்ள ஒரு மையத்திற்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதில் தொடக்கப் பள்ளிகல்வி சார்பில் தனியாகவும், இடைநிலை கல்வி அலுவலகம் சார்பில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான புத்தகங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பும் பணி துவங்கி உள்ளது. கல்வித் துறையினர் கூறுகையில், 'பாடபுத்தகங்கள், சீருடைகள், காலணிகள், புத்தகப்பைகள் வந்துள்ளன. இதில் பாடபுத்தகங்கள், சீருடைகள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. விரைவில் புத்தகப்பை, காலணிகள் அனுப்பப்பட உள்ளது,' என்றனர்.