நம்ம பள்ளி.. நம்ம வாத்தியார்...
வாழ்நாள் வழிகாட்டிநான் ஆசிரியர் பணியை தேர்வு செய்ய உந்து சக்தியாக இருந்தது எங்கள் அறிவியல் ஆசிரியர் தான். சிறந்த ஆசிரியர் என்பவர் பாடத்தை மட்டும் நடத்தாமல், மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குமே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என நான் கற்றுக்கொண்டது அவரிடம் தான்.மாணவர்களுக்கு பாடத்தின் மீது ஆர்வத்தை தூண்டும் வகையிலான அவரது அர்ப்பணிப்பு, பொறுமை, அனுசரித்து செல்லும் தன்மை சிறப்பானது.மாணவர்களுக்கு பாடத்தை கற்றுக்கொடுக்கும் ஆர்வம் என்றுமே குறையவே இல்லை. என்னுடைய சந்தேகங்களை இன்றும் அவரிடம் தான் கேட்கிறேன். இன்றும் மட்டுமல்ல, என்றுமே எனக்கு அவர்தான் சிறந்த வழிகாட்டி- ஆமோதனம்பாள், பட்டதாரி அறிவியல் ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பெண்ணாடம்.