உள்ளூர் செய்திகள்

என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கல்விக் குழுமத்தில் பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரியின் 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக சென்னை தனியார் நிறுவனத்தின் துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், “வெளிநாடுகளில் டிப்ளமோ, பி.இ., பட்டதாரிகளுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.கல்வி என்பது உங்கள் வாழ்க்கையை உயர்த்தும். அனுபவம் என்பது உயரமான இடத்தில் அமர வைக்கும்” என்றார்.விழாவில் கட்டட வியல், கணினி அறிவியல், மின்னியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பவியல், எந்திரவியல், முதுகலை மேலாண்மை ஆகிய துறைகளை சார்ந்த 232 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்