அரசு கலைக்கல்லுாரியில் இன்று மாணவர் சேர்க்கை
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் பாக்கியமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டு இளநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு துவங்கி நடந்து வருகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், புள்ளியியல், தாவரவியல் மற்றும் இரண்டாம் சுழற்சியில் வணிகவியல், வணிகவியல் (கணினி பயன்பாடு) மற்றும் வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, இது வரை விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (ஜூன் 17) முதல் நடக்க உள்ளது.கலந்தாய்வில் பங்கேற்கும் போது, இணையவழி விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், நகல்கள், 5 மார்பளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.