உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் திறன் மலர்

கோவை: மாநகராட்சி பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க, மாதந்தோறும் மாணவர் திறன் மலரின் முதல் இதழ் வெளியிடப்பட்டது.மாநகராட்சி கல்வி பிரிவு அதிகாரிகள் கூறுகையில், “மாணவர்கள் மொபைல்போன், டிவி.,யில் மூழ்கி உள்ளனர். அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர மாணவர் இதழ் வெளியிட, கடந்த கல்வி ஆண்டில் திட்டமிடப்பட்டது. தேர்தல் காரணமாக அது தள்ளி போனது.இதில் மாணவர்களின் அறிவியல் புரோஜெக்ட்கள், கட்டுரைகள், ஓவியங்கள், புதிய முயற்சிகள் வெளியிடப்படும். நூலகத்தில் மலரை மாணவர்கள் வாசிக்கலாம்,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்