பட்டதாரி ஆசிரியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு
கரூர்: சின்னமநாயக்கன்பட்டி, அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு, நாளைக்கு நேரில் வரலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கரூர் மாவட்டம், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் சின்னமநாயக்கன்பட்டி, அரசு ஆதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் (விலங்கியல் மற்றும் வேதியியல்) காலி பணியிடத்தை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு, கல்வித்தகுதி பெற்ற நபர்கள் உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் நாளைக்குள் (7ம் தேதி) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், கரூர் கலெக்டர் அலுவலக வளாக முதல் தளம், அறை எண்.114, கரூர் - 639007 என்ற முகவரிக்கு நேரடி அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.