உள்ளூர் செய்திகள்

கல்லுாரி மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், கடந்த 1ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கியது.ஒரு வாரத்துக்கு அந்தந்த வகுப்பு துறை சார்பில், பாடத்திட்டங்கள், தேர்வு எழுதும் முறை குறித்து, மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றன. வணிகவியல் துறை சார்பாக அறிமுக பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லுாரி முதல்வர் ஜெயசங்கர் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் சிவஞான சித்தி, தமிழக அரசால் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு திட்டம், நான் முதல்வன் திட்டம், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பது குறித்து விளக்கினார். மாணவர்கள் தேர்வெழுதுவது, வினாக்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து, உதவி பேராசிரியர் தங்கராஜ், கல்லுாரி வகுப்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் குறித்து பேராசிரியர் சின்னமணி விளக்கினர். இதே போல், ஒவ்வொரு வகுப்பு துறை வாரியாக மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்