உள்ளூர் செய்திகள்

அழகப்பா பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை., தொலைநிலைக்கல்வி மே 2026ல் நடந்த இளநிலை, முதுநிலை, பட்டயப்பிரிவு மற்றும் சான்றிதழ் பிரிவுக்கான தேர்வு முடிவுகள் www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான 7 நாளுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.660 செலுத்தி இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற விரும்புவோர், தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் விடைத்தாள் நகல் ஒன்றுக்கு ரூ.550 இணையதளம் மூலம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்று மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நகல் பெற்ற நாளில் இருந்து 7 தினங்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.550 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்