உள்ளூர் செய்திகள்

பள்ளியில் தமிழ் கண்காட்சி: கலைநிகழ்ச்சிகள் அசத்தல்

உடுமலை: உடுமலை ஆர்.கே.ஆர்., குருவித்யா மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆர்.கே.ஆர்., குருவித்யா ஜூனியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் முத்தமிழ் மன்றம் சார்பில், தமிழ் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.கண்காட்சியில், பழங்கால பொருட்கள், பனையோலை பொருட்கள், நாணயங்கள், விளையாட்டு பொருட்கள், ஐவகை நிலங்கள், தஞ்சை பெரிய கோவில் மாதிரிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.தொடர்ந்து மாணவர்களின் பேச்சு, பாடல், கவிதை மற்றும் நாடகம் நடந்தது. பங்கேற்ற மாணவ, மாணவியரையும், ஏற்பாடு செய்த தமிழாசிரியர்களையும், ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனத்தின் தாளாளர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர்கள் செல்வகுமார், கோகிலாமணி உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்