உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

திருக்கோவிலூர்: திருக்கோவிலுார் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் தலைமை தாங்கினார்.வட்டார கல்வி அலுவலர் வேணுகோபால் வரவேற்றார்.மாற்றுத்திறனுடைய 42 மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவி, சக்கர நாற்காலி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை சிறப்பு பயிற்றுநர்கள் ஜெயசீலன், சுமதி, சுமையா, கலா, இயன்முறை மருத்துவர் இளவரசன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்