உள்ளூர் செய்திகள்

அரசு கலைக் கல்லுாரியில் பி.ஜி., அட்மிஷன்

அரசு கலைக் கல்லுாரியில் முதுநிலை பிரிவில் 21 பாடப்பிரிவுகள் இரு சுழற்சிகளில் வழங்கப்படுகின்றன.இதில், 20 முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு 5,046 பேர் விண்ணப்பித்துள்ளனர். 557 இடங்கள் மட்டுமே உள்ளன.விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், என்.சி.சி., உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு காலை 9 மணிக்கு நடக்கிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 13ம் தேதி நடக்கிறது.ஆன்லைனில் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்படாததால், விண்ணப்பித்த மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள், நகல்களுடன் ஒதுக்கப்பட்டுள்ள துறைக்கு நேரில் சென்று, கலந்தாய்வில் பங்கேற்குமாறு கல்லூரி முதல்வர் எழிலி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்