உள்ளூர் செய்திகள்

தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு தேர்வு முடிவு வெளியீடு

நடந்து முடிந்த ஜூன் 2026 தொடக்க கல்வி பட்டயத்தேர்வு முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு, வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து, வெளியிட்டுள்ள அறிக்கை:நடைபெற்ற ஜூன் 2026 தொடக்க கல்வி பட்டயத்தேர்வு முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு, 12ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.பயிற்சி மாணவர்கள் அவரவர் பயின்ற, ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும், தனித்தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.இந்த மாணவர்கள், தங்களது விடைத்தாட்களின் ஒளி நகல் பெற விண்ணப்பிக்க விரும்பினால், www.det.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், DEE EXAM MAY/JUNE Scan copy என்ற வாசகத்தினை கிளிக் செய்தால், அதில் தோன்றும் பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.ஆக., 14ம் தேதி முதல், 20ம் தேதிக்குள், அரசு விடுமுறை நாட்களை தவிர விண்ணப்பிக்கலாம். தபால் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.விடைத்தாளர்களின் ஒளி நகல் வேண்டி விண்ணப்பித்த தேர்வர்கள் மட்டுமே, பின்னர் மறு கூட்டல், மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும்.அதற்காக அறிவிக்கை பின்னர் வெளியிடப்படும். விடைத்தாள் ஒளி நகல் வேண்டி, ஒரு பாடத்திற்கு ரூ.275 கட்டணம் செலுத்தி, தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம், என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார்.இவ்வாறு, திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்