அரசு வழக்கறிஞராக பணியாற்ற விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை: நீதிமன்றங்களில், காலியாக உள்ள அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:சென்னை மாவட்டத்தில் உள்ள சார் நிலை நீதிமன்றங்களில், குற்றவியல் மற்றும் உரிமையியலில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டது.அதன்படி சார்நிலை நீதிமன்றங்களில், பதிவுக் கால முறையில் அரசு வழக்கறிஞராக, பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான, விண்ணப்பங்களை www.chennai.nic.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட, விண்ணப்பங்களை செப்., 2ம் தேதிக்குள் பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட நடுவர் மற்றும் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.