ஜே.சி.டி., கல்லுாரியில் ஓணம் விழா உற்சாகம்
பிச்சனுார்: ஜே.சி.டி., கல்வி நிறுவனங்களில் ஓணம் விழாவை முன்னிட்டு, பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மெகா திருவாதிரைக் களி நடனம் நடந்தது. பாரம்பரிய உடைகளில் மாணவர்கள் நிகழ்த்திய நடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பூக்கோலம் அமைக்கும் போட்டி, பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.மலையாள நடிகை ஆஷிகா அசோகன் சிறப்பு விருந்தினராகக் பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினார். விழாவில் ஜே.சி.டி., நிறுவனங்களின் துணைத் தலைவர் கவுதம் ராஜமாணிக்கம், செயலாளர் துர்கா சங்கர், முதல்வர் மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.